தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பதவி விலகுகிறார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச? - திங்கள்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்

இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கள்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahinda Rajapaksa
Mahinda Rajapaksa

By

Published : May 7, 2022, 4:06 PM IST

இலங்கை: இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இந்த அசாதாரண சூழலுக்கு பொறுப்பேற்று, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ஏப்ரல் 1ஆம் தேதி இலங்கையில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. ஐந்து நாள்களுக்குப் பிறகு அவசர நிலை ரத்து செய்யப்பட்டது.

ஆனால், அதிபர் மற்றும் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள், மாணவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்கள் கொந்தளிப்புடன் இருப்பதால் பதவி விலகும்படி பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் அதிபர் கோத்தபய ராஜபக்ச கோரிக்கை விடுத்ததாகவும், அதனை பிரதமர் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிகிறது.

அதிபர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தின்போது, பதவி விலக பிரதமர் மகிந்த ராஜபக்ச ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வரும் திங்கள்கிழமை (மே9) மகிந்த ராஜபக்ச அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பட்டினி சாவுகளை நோக்கி பயணிக்கும் இலங்கை - சபாநாயகர் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details