தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கையின் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் அரசியல் பாதை! - சிங்கப்பூர்

இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையின் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் அரசியல் பாதை!
இலங்கையின் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் அரசியல் பாதை!

By

Published : Jul 15, 2022, 10:26 PM IST

Updated : Jul 15, 2022, 11:08 PM IST

இலங்கையின் 6 முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, இறுதியாக அதிபராக பதவியேற்றதன் மூலம் அவரது வாழ்நாள் லட்சியம் நிறைவேறியது. சிங்கப்பூருக்குத் தப்பிச்சென்ற கோத்தபய ராஜபக்ச அவமானகரமான முறையில் ராஜினாமா செய்த பின்னர், அவர் செயல்படும் அரச தலைவராக மட்டுமே உள்ளார். ஆனால் விக்ரமசிங்கே, பல தசாப்தங்களாக இந்த பதவியை தேடிக்கொண்டிருக்கிறார்.

இந்தியப்பெருங்கடலின் தீவு நாடான இலங்கையில், ஒரு சில குடும்பங்கள் நீண்ட காலமாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மேலும் விக்ரமசிங்கே அதன் நீண்டகால தலைவர்களில் ஒருவரான ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மருமகன். ஜெயவர்த்தனா தனது தந்திரத்திற்குப் பெயர் பெற்றவர்.

ஆனால் அவரது மருமகன், நாட்டின் உள்சக்தி வலையமைப்புகளில் ஒரு சமயோஜித புத்திசாலியாகக் கருதப்படுகிறார். 1977ஆம் ஆண்டில் அவரை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் ஜெயவர்த்தனா. தேசியக் கட்சி (UNP) உண்மையில் மாமா மற்றும் மருமகனுக்காக நின்றது. 1996ஆம் ஆண்டில் மரணமடைந்த ஜெயவர்த்தனா, விக்ரமசிங்கேவை "ஒரு நாள்" இலங்கையின் அதிபராக பதவியமர்த்த விரும்பியதாக குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

உயில் எழுதி கொடுத்த ரணில்: இப்போது அவர் குறைந்தபட்சம் ஆறு நாட்கள் பதவியில் இருப்பார். தற்காலிக அதிபராக இன்றைய (ஜூலை 15) பதவியேற்பு என்பது விக்ரமசிங்கே, தனது முழு பதவிக்காலத்தையும் பிரதமராக தொடரமுடியாததைக் காட்டுகிறது.

1999 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்டவர், இரண்டு தேர்தல்களிலும் தோல்வியடைந்தார்.

மேலும் 2020ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரமசிங்கேவே இலங்கை நாட்டின் யுஎன்பி கட்சியின் ஒரே எம்.பி. ஆனால் அவரது அரசியல் சூழ்ச்சியால் அவர் எதிரிகளை விரட்டியடிக்கவும், ராஜபக்சவின் சகோதரர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்த பின்னர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் பதவிக்கு அவரது ஆறாவது நியமனத்தைப் பெறவும் முடிந்தது. விக்ரமசிங்கே ஆங்கில விரிவுரையாளரான மைத்திரியை மணந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

மேலும் அவர்களின் சொத்துகளை அவரது பழைய பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உயிலாக கொடுத்துள்ளனர். ஆனால், ராஜபக்சவை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து விரட்டியடித்த ஆர்ப்பாட்டக்காரர்களால் கடந்த வாரம் அவர்களது வீடு தீக்கிரையாக்கப்பட்டபோது, ​​அவரது "மிகப்பெரிய பொக்கிஷம்" என்று அவர் அழைத்த 2,500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நூலகம் அவரது பெரும் இழப்புகளில் ஒன்றாகும்.

பப்ளிஷிங் மற்றும் தோட்டங்களில் வேரூன்றிய ஒரு பணக்கார மற்றும் அரசியல் தொடர்புள்ள குடும்பத்தில் பிறந்த விக்ரமசிங்கே, குடும்ப செய்தித்தாள் ஒன்றில் புதிய நிருபராக பணியாற்றத் தொடங்கினார். ஆனால் 1973ஆம் ஆண்டில் உலகின் முதல் பெண் பிரதமரான சிறிமா பண்டாரநாயக்கவினால் குடும்ப நிறுவனம் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அவர் சட்டப்பூர்வத் தொழிலுக்கு திரும்பினார்.

அனுதாப வாக்குகள்: "லேக் ஹவுஸ் கையகப்படுத்தப்படாவிட்டால், நான் ஒரு ஊடகவியலாளனாக மாறியிருப்பேன். எனவே உண்மையில், திருமதி பண்டாரநாயக்கா என்னை அரசியலுக்கு அனுப்பினார்" என்று விக்ரமசிங்கே ஒருமுறை AFP செய்தி முகமையிடம் கூறினார். 1993 மே மாதம், அதிபர் ரணசிங்கே பிரேமதாசா தற்கொலை குண்டால் படுகொலை செய்யப்பட்டதன் விளைவாக, அவர் பிரதமராக முதலில் நியமனம் பெற்றார்.

பின் பிரதமர் டிங்கிரி பண்டா விஜேதுங்க அதிபராக பதவி உயர்வுபெற்றிருந்தார். அத்தருணத்தில் அவருக்குப் பதிலாக விக்ரமசிங்கே, அப்போதைய கைத்தொழில், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோன்ற தாக்குதல் நடந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு அதிபர் பதவி மறுக்கப்பட்டது.

அவரது முக்கிய தேர்தல் போட்டியாளரான சந்திரிகா குமாரதுங்கா, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு தற்கொலை குண்டால் காயமடைந்தார். விக்ரமசிங்கே வெற்றி பெறுவார் என்று பலர் எண்ணிய தேர்தலில் இலங்கையில் அரசியல் நிலை மாறியது.

மேலும் குறிப்பிடத்தக்க அனுதாப வாக்குகளை சந்திரிகா குமாரதுங்கா பெற்றார்.

இப்போது அரசியல் சக்கரம் மீண்டும் சுழலலாம்: ராஜபக்சவை வெளியேற்றிய ஆர்ப்பாட்டக்காரர்களும், விக்கிரமசிங்கேவை வெளியேறுமாறு கோருகின்றனர். மேலும் பிரேமதாசாவின் மகன் சஜித், அடுத்த வாரம் அதிபராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள முன்னணிப் போட்டியாளர்களில் ஒருவர்.

பணவீக்கத்தில் புதிய அதிபர்: விக்ரமசிங்கே நீண்ட காலமாக "மிஸ்டர் க்ளீன்" பிம்பத்தைக் கொண்டிருந்தார். ஆனால் 2015 முதல் 2019ஆம் ஆண்டில் அவரது கடைசி பிரதமர் பதவிக்காலத்தில் மத்திய வங்கிப் பத்திரங்கள் சம்பந்தப்பட்ட உள் வர்த்தக மோசடியால் அவரது நிர்வாகம் அதிர்ந்தது. அவரது பள்ளித்தோழரும், மத்திய வங்கித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமானவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பின. விக்ரமசிங்கே ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

இதற்கிடையே 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச்செலுத்தாமல், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யப் பணமில்லாமல் திவாலாகிவிட்ட இலங்கை தேசத்தில் அவர் முக்கிப்பொறுப்பேற்கிறார்.

மேற்கத்திய சார்பு, தடையற்ற சந்தை சீர்திருத்தவாதி என்ற அவரது அந்தஸ்து சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாட்டு கடனாளிகளுடன் பிணை எடுப்பு பேச்சுவார்த்தைகளை சுமூகமாக்க முடியும். ஆனால், நாட்டின் முன்னோடியில்லாத பொருளாதார துயரங்களுக்கு விரைவான தீர்வு இருக்காது என்று விக்கிரமசிங்கே ஏற்கெனவே எச்சரித்துள்ளார்.

"மோசமான நிலை இன்னும் வரவில்லை. எங்களிடம் இப்போது மிக உயர்ந்த பணவீக்கம் உள்ளது மற்றும் மிகை பணவீக்கம் அதன் பாதையில் உள்ளது" என்று விக்கிரமசிங்கே கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறினார்.

  • செய்தியின் மூலம் : AFP செய்தி முகமை

இதையும் படிங்க:இலங்கை நெருக்கடி: நாட்டைவிட்டு வெளியேறினார் அதிபர் கோத்தபய ராஜபக்சே - தப்பிச்சென்றது எங்கே?

Last Updated : Jul 15, 2022, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details