தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் அதிகாரப்பூர்வ முறையில் அறிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா

By

Published : Jul 11, 2022, 1:59 PM IST

கொழும்பு (இலங்கை): இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பிலுள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களில் குளிக்கும் காட்சிகள், ஏராளமானோர் வீட்டில் இருக்கும் காட்சிகளும் வெளியானது. சில போராட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிபர், பிரதமர் பதவி விலகும் வரை வீட்டை விட்டு வெளியேறமாட்டோம் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் அவர் அதிகாரப்பூர்வ முறையில் அறிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், அதிபர் தப்பியோடினார். எங்கு இருக்கிறார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. பிரதமர் ரணிலும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அமைச்சர்கள் 4 பேர் அடுத்தடுத்து பதவி விலகினர். இதனால் இலங்கை அரசு நிர்வாகம் தடுமாற்றம் கண்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா உள்பட 7 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் பதவிநீக்கம்: ஜெலன்ஸ்கி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details