தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கையில் போராட்டம் எதிரொலி: சமூக வலைதளங்களுக்கு அரசு தடை! - இலங்கை பொருளாதார நெருக்கடி

இலங்கையில் இன்று (ஏப். 3) அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்து முடக்கியுள்ளது.

இலங்கையில் போராட்டம் எதிரொலி
இலங்கையில் போராட்டம் எதிரொலி

By

Published : Apr 3, 2022, 11:44 AM IST

கொழும்பு: இலங்கையில் கரோனா பெருந்தொற்று காரணத்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு போன்றவற்றால் மக்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

நாடு முழுவதும் இலங்கை அரசை கண்டித்து, பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டங்கள் தீவிரமடைந்ததால், இலங்கையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து எதிர்கட்சிகள் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று (ஏப். 3) போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தன.

இதனால், நாடு முழுவதும் நேற்று (ஏப். 2) மாலை 6 மணி முதல் நாளை (ஏப். 4) காலை 6 மணி வரை என மொத்தம் 36 மணி நேரம் முழு ஊரடங்கை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இன்று (ஏப். 3) நள்ளிரவு முதல் இலங்கை முழுவதும் சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்து முடக்கியுள்ளது.

இதனால், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூ-ட்யூப், ஸ்னாப்சேட், டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற பல சமூக வலைதளங்களின் சேவை பாதிக்கப்படும். மேலும், பாதுகாப்பு காரணம் என்ற பெயரில் அவசரநிலையை பிரகடனம் செய்திருப்பது மனித உரிமை மீறல் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நாடு தழுவிய போராட்டம்... இலங்கை முழுவதும் முழு ஊரடங்கு...

ABOUT THE AUTHOR

...view details