இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களான அரிசி, பால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவையின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக நாளொன்றுக்கு 13 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிபர் பதவி விலக வேண்டும்: இந்த நெருக்கடிகளுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சேவே காரணம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டிவந்த நிலையில், பொதுமக்களும் அதிபர் பதவி விலகவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த போராட்டங்கள் தீவிரமடைந்ததால், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எதிர்கட்சிகள் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 3) போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தன. மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.