தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கை : தப்ப முயன்ற பசில் ராஜபக்சே - சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள்! - இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே

இலங்கையிலிருந்து துபாய் தப்பிச் செல்ல இருந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே கொழும்பு விமான நிலையத்தில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இலங்கை
இலங்கை

By

Published : Jul 12, 2022, 12:56 PM IST

கொழும்பு (இலங்கை): இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அதிரடியாக புகுந்து மாளிகையை கைப்பற்றினர்.

அதிபர் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சிகள், கேரம் போர்டு விளையாடுவது, சோபாவில் படுத்து உறங்குவது, பிரம்மாண்ட பாத்திரத்தில் இரவு உணவு தயாரிப்பது போன்ற காட்சிகளும் வெளியானது.

முன்னதாக, மக்கள் ஒன்று திரண்டு வந்ததால், அதிபர் கோத்தபய மாளிகையை காலி செய்துவிட்டு தப்பி ஓடினார். தற்போது வரை அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில், ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரும், இலங்கை முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே இலங்கையிலிருந்து விமானம் மூலம் துபாய் தப்பிச் செல்ல நள்ளிரவு 12 மணியளவில் கொழும்பு விமான நிலையம் வந்தார். அவர் தப்பிச் செல்லும் தகவல் வெளியானதையடுத்து, போராட்டங்காரர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். அலுவலர்களும் தடுத்து நிறுத்தியதால், வேறுவழியின்றி 3.15 மணியளவில் பசில் ராஜபக்சே வீடு திரும்பினார்.

இதையும் படிங்க: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details