சியோல்:கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற தென் கொரிய தொடரான 'ஸ்குவிட் கேம்' இல் 'பிளேயர் 001' எனும் கதாப்பதிரமாக அறியப்படும் கொரிய நடிகர் ஓ யோங்-சு, தன்னை பாலியல் சீண்டல் செய்ததாக் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டி புகார் அளித்துள்ளார்.
வட கொரியாவில் உள்ள கேசோங்கில் 1944 இல் பிறந்தவர் நடிகர் ஓ யோங்-சு(78). பிறந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் தென் கொரியாவிற்கு குடியேறினார். இந்நிலையில் ஓ யோங்-சு மீது கடந்த 2017-ம் ஆண்டில் தன்னை தகாத முறையில் தொட்டு பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம்சாட்டி ஒரு பெண், புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரானது 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி முடித்து வைக்கப்பட்டது. ஆனால் தற்போது பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டத்தாக கூறப்படுகிறது.