தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல்; தென்கொரியா மக்களுக்கு எச்சரிக்கை

தென்கொரியா தனது கிழக்குக் கடற்கரையில் உள்ள தீவில் வசிக்கும் மக்களுக்கு வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கொரியா பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தென்கொரியா பொதுமக்களுக்கு எச்சரிக்கை

By

Published : Nov 2, 2022, 11:53 AM IST

சியோல்: வடகொரியா மூன்று ஏவுகணைகளை கடலை நோக்கி செலுத்தியதையடுத்து, தென்கொரியா தனது கிழக்குக் கடற்கரையில் உள்ள தீவில் வசிப்பவர்களுக்கு வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பயிற்சிகளை நிறுத்த வேண்டும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு தென்கொரியா மக்களை எச்சரித்துள்ளது.

வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம், தென் கொரியாவுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்தியதற்காக அமெரிக்காவை விமர்சித்தது. மேலும், இதுகுறித்து வெளியிடட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கா தனது பயனற்ற போர் பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இல்லை என்றால், அது அனைத்து விளைவுகளுக்கும் முற்றிலும் பழியை ஏற்க வேண்டியிருக்கும். இதனை மேலும் அமெரிக்கா தொடர்ந்து நீடித்தால் வடகொரியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளை கையில் எடுக்கும்" என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பிலிப்பைன்ஸை உலுக்கிய ‘நால்கே’ புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ கடந்தது..

ABOUT THE AUTHOR

...view details