தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மூன்றாம் நிலை புகைத்தலால் கடுமையான தோல் நோய்கள் ஏற்படக்கூடும் - ஆய்வில் தகவல்! - அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்

மூன்றாம் நிலை புகைத்தல் கடுமையான தோல் நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Skin
Skin

By

Published : Nov 9, 2022, 1:23 PM IST

லாஸ் ஏஞ்சல்ஸ்: புகைப்பிடிக்கும்போது ஒருவர் வெளியிடும் புகையை அருகில் இருப்பவர்கள் சுவாசிப்பது இரண்டாம் நிலை புகைத்தல் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டாம் நிலை புகைத்தால் பல்வேறு சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இதற்கு அடுத்தபடியாக மூன்றாம் நிலை புகைத்தலும் இருக்கிறது. அதாவது, ஒருவர் புகை பிடிக்கும்போது, சிகரெட்டில் இருந்து வெளியேறும் நிகோட்டின் துகள்கள் அவர் அணிந்திருக்கும் உடை, தரை என அனைத்தின் மீதும் படிகிறது. அவை நீண்ட காலம் அப்படியே படிந்திருக்கும் என தெரிகிறது.

இந்த நிக்கோட்டின் துகள்கள் கடுமையான தோல் நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி, மூன்றாம் நிலை புகைத்தலால் கான்டாக்ட் டெர்மடைடிஸ் (contact dermatitis), சொரியாசிஸ் போன்ற தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், புற்றுநோய், இருதய நோய், பெருந்தமனி தடிப்பு போன்ற பிற நோய்களின் அச்சுறுத்தலும் தீவிரமடையக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உடல்நலனைக் கெடுக்கும் காற்று மாசுபாடு; நுரையீரலை வலுப்படுத்தும் யோகாசனங்கள்..!

ABOUT THE AUTHOR

...view details