அமெரிக்கா: லோகன் விமான நிலையத்தில் இருந்த, வியட்நாம் போரில் பயன்படுத்தப்பட்ட பழமையான ஹெலிகாப்டர், சுற்றுலாவுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று(ஜூன் 22) இந்த ஹெலிகாப்டரில் 6 சுற்றுலாப் பயணிகள் பயணித்தனர். லோகன் கவுன்டியில் பறந்த போது, ஹெலிகாப்டர் பிளேயர் மலைக்கு அருகே திடீரென தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த பயணிகள் 6 பேரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.