சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுகாதாரத்துறையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, வெளிநாடுகளில் இருந்து ஆள்சேர்ப்பு செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச்சேர்ந்த மருத்துவர்களை தேர்வு செய்யவுள்ளது.
இதுதொடர்பாக டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் 60 மருத்துவர்களை நியமிக்கப்படவுள்ளதாகவும், இத்திட்டத்தை வரும் 2025ஆம் ஆண்டு வரை தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 180 இளநிலை மருத்துவர்களை பணியமர்த்த சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.