சிங்கப்பூர்:ஒமைக்ரான் வைரசின் துணைப் பிரிவுகளான பி.ஏ., 1 மற்றும் பி.ஏ., 2 வகை வைரஸ்கள் சேர்ந்து, எக்ஸ்.இ., என்ற மரபணு மாறிய புதிய வகை வைரசை உருவாக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது. இந்த துணைப்பிரிவு வைரஸ்கள், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் அதிகளவு பரவத் தொடங்கியது.
பி.ஏ., 2 வகை அதிகளவு பரவும் தன்மை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளில் 90 சதவீதம் பி.ஏ.,2 வகை மற்றும் அதன் துணைப்பிரிவான பி.ஏ., 2.12.1 காரணமாகவே ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சிங்கப்பூரில் இரண்டு பேருக்கு பி.ஏ., 2.12.1 வகை ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.