அபுதாபி: துபாய், சார்ஜா, அபுதாபி, உம் அல் குவைன், ஃபுஜைரா, அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமா உள்ளிட்ட 7 அமீரகங்களை உள்ளடக்கிய ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் ஸாயித் அல் நஹ்யான் சனிக்கிழமை (மே14) தேர்வு செயய்ப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்த கலிபா பின் ஸாயித் அல் நஹ்யான் வெள்ளிக்கிழமை (மே13) மரணித்தார். இதனை அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான வாம் (WAM) அறிவித்திருந்தது.
இந்த நிலையில், புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் ஸாயித் அல் நஹ்யான் சனிக்கிழமை (மே14) தேர்வு செயய்ப்பட்டுள்ளார்.
அமீரகத்தின் புதிய அதிபருக்கு துபாய் ஆட்சியாளரும் மன்னருமான ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், “நாங்கள் உங்களை வாழ்த்துகிறோம். உங்களுக்க என்றென்றும் விஸ்வாசமாக இருப்போம். மக்களும் விஸ்வாசமாக இருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபல நாட்டுடன் தூதரக உறவு- நித்தி நெக்ஸ்ட் டார்கெட்!