தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

குழந்தையின் மாமிசத்தையே தாய்க்கு உணவாக அளித்த ஐஎஸ்ஐஎஸ்ஸின் கொடூரச்செயல்!

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் பெண் ஒருவரை பாலியல் அடிமையாக சித்ரவதை செய்தது மட்டுமில்லாமல், அவரின் ஒரு வயது குழந்தையை அவருக்கே உணவாக கொடுத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

SEX SLAVE IN ISIS CAPTIVITY SHARES ORDEAL
SEX SLAVE IN ISIS CAPTIVITY SHARES ORDEAL

By

Published : Aug 5, 2022, 4:43 PM IST

ஈராக் நாட்டின் சிறுபான்மை மதங்களில் ஒன்று யெசிடி. யெசிடி இன ஆர்வலர் ஜிதான் இஸ்மாயில் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பேட்டியின் துணுக்கு பகிர்ந்துள்ளார்.

ஈராக் எம்.பி, வியன் தஹில், எகிப்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணல் அது என்பது தெரியவந்தது. அந்த நேர்காணலில் ஈராக் எம்.பி., கூறிய தகவல் ஒன்று உலகையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் பெண் ஒருவரை பாலியல் அடிமையாக சித்ரவதை செய்தது மட்டுமில்லாமல் அவரின் ஒரு வயது குழந்தையை அவருக்கே உணவாக கொடுத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதை வியன் தஹில் உறுதி செய்துள்ளார்.

அதாவது, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த அப்பெண்ணை அரசு மீட்டுள்ளது. அப்போது, பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு மூன்று நாள்களாக உணவு, தண்ணீர் எதுவும் கொடுக்காமல் சிறை வைத்திருந்ததாகவும், பின்னர் ஒரு தட்டில் அரிசியும், மாமிசமும் கொடுக்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். கடுமையான பசியால் அதனை உட்கொண்டதாகவும், அதற்கு பிறகே அது தனது ஒரு வயது மகனின் மாமிசம் என்பது தெரியவந்ததாகவும் 'கண்ணீர் மல்க' தங்களிடம் தெரிவித்ததாக அமைச்சர் அந்த பேட்டியில் கூறினார்.

மேலும், அப்பெண்ணை மட்டுமின்றி, அவரின் ஆறு சகோதரிகளையும் சிறைவைத்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் சித்ரவதை செய்துவந்துள்ளனர். அதில், 10 வயதான அவரின் சகோதரி ஒருவரை அவரின் தந்தை, சகோதரிகளின் கண் முன்னே பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் மற்றும் சிரியா), ஐஎஸ்ஐஎல் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் மற்றும் லெவண்ட்) எனப்படும் சன்னி இன பயங்கரவாத அமைப்புகள் இவற்றுக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், இவர்கள் இஸ்லாமியர்களின்கீழ் உலகம் ஒரு குடையாக ஒருங்கிணைய வேண்டும் என நோக்கில் செயல்படுபவர்களாக அறியப்படுகின்றனர். இவர்களின் ஆதிக்கமும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளும் தற்போது குறைந்துள்ளன. எனினும், ஈராக் மற்றும் மத்திய கிழக்கு ஆசியப் பகுதிகளில் தொடர்ந்து அவர்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:போர் முனைப்பில் சீனா..! எச்சரிக்கும் அமெரிக்கா..! எந்த நேரத்திலும் தைவான் மீது படையெடுக்க வாய்ப்பு...?

ABOUT THE AUTHOR

...view details