இந்தோனேசியாவின் முக்கியத் தீவான ஜாவாவில் 5.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏறக்குறைய 44 பேர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க புவியியல் ஆய்வுகளின்படி, மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஜகர்தா வரை உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்திருக்கலாம் என சியாஞ்சூர் நகரில் உள்ள உள்ளூர் நிர்வாக செய்தித்தொடர்பாளர் கூறினார்
அந்நாட்டு ஊடகம் நிலநடுக்கம் குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’நிலநடுக்கத்தால் மருத்துவமனையில் இதுவரை 300 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி பல பேருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள கடைகள், கட்டடங்கள், மருத்துவமனைகள், இஸ்லாமியப் பள்ளிகள் நிலநடுக்கத்தால் பலத்த சேதமடைந்துள்ளன.