பெய்ஜிங்: சீனாவின் குவாங்சி மாகாணத்திலிருந்து ஈஸ்டர்ன் போயிங் 737-800 ரக விமானம் 132 பேருடன் மார்ச் 21ஆம் தேதி குவாங்ஜு மாகாணத்தை நோக்கி புறப்பட்டது. குவாங்ஜு மாகணம் சென்றடைய சில கிலோ மீட்டர்கள் தூரமே இருந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரண்டு நாள்களாக நடைபெற்ற நிலையில், 132 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டு, பகுப்பாய்வுக்காக பெய்ஜிங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் 49,000 துண்டுகள் கண்டுபிடிப்பு - சீனா ஈஸ்டர்ன் போயிங் 737-800 ரக விமானம்
சீனாவில் விபத்துக்குள்ளான போயிங் 737-800 ரக விமானத்தின் 49,000 துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர் அலுவலர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 31) சீனா சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு இயக்குநர் ஜு தாவோ செய்தியாளர்களிடம் கூறுகையில், சீன ஈஸ்டர்ன் போயிங் 737-800 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் 10 நாள்களுக்காக சேகரிக்கப்பட்டுவருகின்றன. இதுவரை 49,117 துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேறும் சகதியும் நிறைந்த மலைப்பகுதியில் விமானம் விழுந்ததால் பாகங்களை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது. இதேபோலத்தான் கருப்பு பெட்டியும் இரண்டு நாள்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் பதிவாகிய விமானிகளின் உரையாடல்கள், விமானத்தின் தரவுகள், விபத்து காரணங்கள் 20 நாள்களுக்குள் அறிக்கையாக அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சீன விமான விபத்தில் 133 பயணிகள் உயிரிழப்பு?