தமிழ்நாடு

tamil nadu

உருமாறிய ஒமைக்ரான் வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் ஆன்டிபாடி கண்டுபிடிப்பு!

By

Published : Oct 31, 2022, 2:13 PM IST

உருமாறிய ஒமைக்ரான் வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் 'S2X324' என்ற சக்தி வாய்ந்த நியூட்ரலைசிங் ஆன்டிபாடியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Scientists
Scientists

நியூயார்க்: உருமாறிய ஒமைக்ரான் வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் பான் வேரியண்ட் மற்றும் சக்தி வாய்ந்த நியூட்ரலைசிங் ஆன்டிபாடியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டேவிட் வீஸ்லர், சுவிட்சர்லாந்தில் உள்ள விர் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் கோர்ட்டி ஆகியோர் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பான ஆய்வறிக்கை "சயின்ஸ்" என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அந்த நியூட்ரலைசிங் ஆன்டிபாடிக்கு 'S2X324' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆன்டிபாடி இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எல்லா வகை ஒமைக்ரான் திரிபுகளுக்கும் எதிராக செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை காக்டெய்ல் முறையில் ஆன்டிபாடி சிகிச்சையில் பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திய பிறகும் கரோனா தொற்று ஏற்பட்டவர்களிடம், இந்த நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகள் உற்பத்தியாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தடுப்பூசி செலுத்தியவர்களிடம் ஆன்டிபாடிகள் உற்பத்தியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள், அடுத்த தலைமுறை கரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதில் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உலக சுகாதார அமைப்பு: வரலாற்றில் முதல் முறையாக காசநோய் பாதிப்பு அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details