தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு கட்டுபாடுகளை தளர்த்திய சவூதி அரேபியா - ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பிக் அல்ரபியா

ஹஜ் யாத்திரைக்கு வரும் புனித பயணிகளுக்கான அனைத்து வயது வரம்பு கட்டுபாடுகளையும் சவூதி அரேபியா நீக்கியுள்ளது.

Etv Bharatஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு கட்டுபாடுகளை தளர்த்திய சவூதி அரேபியா அரசு
Etv Bharatஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு கட்டுபாடுகளை தளர்த்திய சவூதி அரேபியா அரசு

By

Published : Jan 10, 2023, 12:27 PM IST

ரியாத்:சவூதி அரேபியவில் நடந்து வரும் ஹஜ் எக்ஸ்போ 2023 விழாவில் பேசிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பிக் அல் ரபியா இந்த ஆண்டு ஹஜ்ஜிற்கு வரும் புனித பயணிகளுக்கான எண்ணிக்கை மற்றும் வயது வரம்பு கட்டுபாடுகள் நீக்கப்படுகிறது. கரோனா தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளில் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை போல இந்த ஆண்டும் அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டில் சுமார் 2.5 மில்லியன் பேர் புனித பயணத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது. கரோனா கட்டுபாடுகளால் அடுத்தடுத்த ஆண்டுகளில் எண்ணிக்கை குறைந்தது. அதன்பின் ஊரடங்கு தளர்வுக்கு பின் படிப்படியாக எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.

அதைத்தொடர்ந்து இந்தாண்டுக்கான ஹஜ் பயணிகளுக்கான விதிமுறைகளை அந்நாட்டு அரசு வெளியிட்டது. அதில், புனித யாத்திரைக்கு விண்ணப்பிக்கும் பயணம் ஜூலை மாதத்தின் பாதி வரை செல்லுபடியாகும். தேசிய அல்லது குடியுரிமை உரிமம் பெற்றிருக்கவேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணம் வைத்திருக்க வேண்டும். கூடுதலாக, அவர்கள் புனித தலங்களுக்கு வருவதற்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்னதாக ACYW quadruple meningitis(மூளைக் காய்ச்சல் தடுப்பூச்) தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ABOUT THE AUTHOR

...view details