துபாய்:சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியின் முற்றத்தில் ஒருவர் ராணி 2ஆம் எலிசபெத்தின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்ற பதாகையுடன் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து விசாரணை நடத்திய சவுதி போலீசார் நேற்று (செப் 12) ஏமன் நாட்டை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், இஸ்லாமியர் அல்லாத ஒருவர் மெக்காவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு மெக்காவில் புனித பயணம் செய்பவர்கள் பதாகைகள் வைத்திருக்கவும், கோஷங்கள் எழுப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை ஏமான் நாட்டு நபர் மீறியதால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.