தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"Mrs World" உலக அழகி பட்டத்தை வென்றார் இந்தியாவின் சர்கம் கெளஷல் - Bhawna Rao

திருமணமான பெண்களுக்கான உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த சர்கம் கெளஷல் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார்.

Mrs World 2022 பட்டத்தை தட்டினார் இந்தியாவின் சர்கம் கெளஷல்!
Mrs World 2022 பட்டத்தை தட்டினார் இந்தியாவின் சர்கம் கெளஷல்!

By

Published : Dec 19, 2022, 10:14 AM IST

டெல்லி:அமெரிக்காவில் 1984ஆம் ஆண்டில் இருந்து திருமணமான பெண்களுக்கான Mrs World அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான Mrs World 2022 போட்டி டிச.17ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள வெஸ்ட்கேட் லாஸ் வீகாஸ் என்றும் ரெசார்ட்டில் நடந்தது. இந்த போட்டியில் 63 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

போட்டியின் முடிவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சர்கம் கெளஷல் Mrs World 2022 பட்டத்தை தட்டிச் சென்றார். 2001ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த நடிகையும் மாடலுமான அதிதி கோவித்ரிகர் Mrs World பட்டத்தை வென்றார். அதன்பின் 21 ஆண்டுகளுக்கு பின் கெளஷல் வென்றுள்ளார்.

இதுகுறித்து 2001ஆம் ஆண்டு Mrs World பட்டத்தை வென்ற அதிதி கோவித்ரிகர் கூறுகையில், “Mrs World 2022 பட்டம் வென்ற சர்கம் கெளஷலுக்கு வாழ்த்துகள். இது 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் கிரீடம் மீண்டும் வந்த தருணம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: FIFA World cup: 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அர்ஜென்டினா வெற்றி; கொண்டாடும் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details