டெக்சாஸ்: தலைப்பாகை அணிந்த அமெரிக்காவின் முதல் சீக்கிய காவல்துறை அலுவலர் சந்தீப் சிங் தாலிவால், கடந்த 2019ஆம் ஆண்டு ஹூஸ்டனில் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரபல ரவுடியைப் பிடிக்கச்சென்றபோது சந்தீப் சிங் சுட்டுக் கொல்லப்பட்டதாகத்தெரிகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பரோல் விதிகளை மீறியதற்காக போலீசால் தேடப்பட்டு வந்த ரவுடி ராபர்ட் சோலிஸை கைது செய்தனர். இந்த வழக்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், சந்தீப் சிங் தாலிவால் கொலை வழக்கில், ராபர்ட் சோலிஸுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு டெக்சாஸ் மாகாண காவல்துறை அலுவலர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சந்தீப் சிங் தாலிவாலையும் நினைவுகூர்ந்துள்ளனர்.