சியோல்: தென்கொரியாவைத் தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், செல்போன், டிவி, ஏசி உள்ளிட்டப் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. உலகின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக சாம்சங் உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக லீ ஜே யோங் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ பியுங் பங் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
லீ ஜே யோங் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்படி, சாம்சங் குழுமத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்குப் புதிய தலைவர்களை நியமித்தார். அந்த வகையில், சாம்சங் நிறுவனத்தின், செல்போன் விற்பனைக்கான உலகளாவிய சந்தைப்படுத்துதல் மையத்தின் தலைவராக லீ யங் ஹீ என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.