தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உக்ரைன் போர் எதிரொலி : ஐநாவின் மூன்று அமைப்புகளுக்கான தேர்தலில் ரஷ்யா தோல்வி! - russia president

ஐநா பொதுச் சபையின் மூன்று அமைப்புகளுக்கான தேர்தலில் ரஷ்யா தோல்வியை தழுவியது.

Putin
Putin

By

Published : Apr 8, 2023, 9:37 AM IST

ஜெனீவா :உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையால் உலகளாவிய அதிருப்தி மற்றும் எதிர்ப்பை சந்தித்து வரும் ரஷ்யா அதன் பிரதிபலன்களை தற்போது அறுவடை செய்யத் தொடங்கி உள்ளது. உலகளாவிய அதிருப்திக்கு எடுத்துக்காட்டாக ஐநா பொதுச் சபைகளுக்கான மூன்று தேர்தலில் ரஷ்யா தோல்வியை தழுவியது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஒராண்டை கடந்தும் தொடர்ந்து வருகிறது. பல்வேறு நாடுகளின் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடைகளை தாண்டியும் ரஷ்யாவின் போர் தொடர்ந்து வருகிறது. 54 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொருளாதார மற்றும் சமூகக் கவுன்சிலின் ரஷ்யாவிற்கு எதிரான 6 கட்டுப்பாடற்ற தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.

கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி ரஷ்யா, உக்ரைன் இடையிலான ராணுவ நடவடிக்கை தொடங்கி ஒராண்டு கடந்த நிலையில், போர் நிறுத்தம் மற்றும் படை விலக்கம் குறித்து குறித்து ரஷ்யாவை வலியுறுத்தி ஐநா சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு 141 ஆதரவு வாக்குகள் மற்றும் 7 எதிர்ப்பு வாக்குகள் பதிவாகின. 32 உறுப்பினர்கள் நடுநிலை வகிப்பதாக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இருப்பினும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு ஐநா உறுப்பு நாடுகள், ரஷ்யா மீது கடும் அதிருப்தியில் உள்ளன. இந்நிலையில், மூன்று அமைப்புகளுக்கான உறுப்பினர் தேர்வில் ரஷ்யா தோற்கடிக்கப்பட்டு உள்ளது. ஐ.நாவின் பெண்களுக்கான அமைப்பில் ரூமேனியாவால் ரஷ்யா தோற்கடிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் ஐநா குழந்தைகளுக்கான அவசர நிதியமான யுனிசெப்பில் நிர்வாகக் குழு உறுப்பினருக்கான தேர்தலில் எஸ்டோனியாவாலும், குற்றத தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஆணையத்தின் உறுப்பினருக்கான ரகசிய வாக்கெடுப்பில் அர்மீனியா மற்றும் செக் குடியரசு நாடுகளால் ரஷ்யா தோற்கடிக்கப்பட்டன.

ஐநாவின் சாசன அடிப்படையை மீறும் எந்த நாட்டுக்கும் ஐநா அமைப்பில் உறுப்பினராக இருக்க அனுமதி கிடையாது என்பதை ஐநா பொருளாதார மற்றும் சமூகக் கவுன்சில் உறுப்பினர்கள் உணர்த்தி இருப்பதாக அமெரிக்காவுக்கான தூதர் லிண்டா தாமஸ் கூறினார்.

இதையும் படிங்க :"சட்டம் மனிதாபிமானத்தை தொடும் வகையில் இருக்க வேண்டும்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்!

ABOUT THE AUTHOR

...view details