ருமேனியா:காலநிலை மாற்றம் என்பது உலகளவில் முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த பொதுப்போக்குவரத்தை ஊக்குவிப்பது உள்ளிட்டப் பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், ருமேனியா அரசு புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஸ்குவாட் எனப்படும் உடற்பயிற்சியை 20 முறை செய்தால், பேருந்து டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்து, பொதுமக்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், அவர்களது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.