லண்டன்:ராணி எலிசபெத்தின் உடல் நிலை குறித்த தகவல் கிடைத்ததும் வியாழக்கிழமை (08.09.2022) காலை முதலே அரச குடும்பத்தினர் ஸ்காட்டிஷ் எஸ்டேட் பகுதியில் குவிந்திருந்தனர்.
ராணியின் மறைவைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் பொறுப்பேற்று இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்வுகளில் வழிநடத்துவார். ராணி மறைவு குறித்த தகவலையடுத்து அவரது பேரன்களான பிரின்ஸ் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோரும் லண்டன் விரைந்துள்ளனர்.