தோகா: இயற்கை எரிவாயு இறக்குமதியில் ஜெர்மனி கத்தாருடன் 15 ஆண்டு கால ஒப்பந்தத்தில் இன்று (நவம்பர் 29) கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2026ஆம் ஆண்டு முதல் அமலுக்குவருகிறது. இதன்மூலம் கத்தார் 20 லட்சம் டன் திரவ இயற்கை எரிவாயுவை ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கும். கத்தாரின் எனர்ஜி மற்றும் கோனோகோபிலிப்ஸ் நிறுவனங்கள் மூலம் ஜெர்மனியின் பிரான்ஸ்புஎன்டல் முனையம் வழியாக இயற்கை எரிவாயு கைமாற்றப்படும். இயற்கை எரிவாயு பயன்பாட்டில் ஜெர்மனி முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக ரஷ்யாவிடம் ஒப்பந்தம் செய்திருந்தது.
இயற்கை எரிவாயு திரவம்... ஜெர்மனி-கத்தார் இடையே ஒப்பந்தம்... - ஜெர்மனி கத்தார் இடையே ஒப்பந்தம்
இயற்கை எரிவாயு இறக்குமதியில் ஜெர்மனி கத்தாருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆனால், போர் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ரஷ்யாவிடமிருந்து எந்த எரிவாயுவையும் வாங்கப்போவதில்லை என்று அறிவித்தது. இதனால், ஜெர்மனியில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்நாட்டு பொருளாதார வல்லூர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் மாற்று நாடுகளிடம் இருந்து எரிவாயுவை வாங்கி விநியோகம் செய்ய ஜெர்மனி திட்டமிட்டது. அந்த வகையில், கத்தாருடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல பழைய எண்ணெய் கிணறுகள் மற்றும் நிலக்கரி சுரங்கம் மூலம் இயங்கும் மின் நிலையங்களை மீண்டும் செயல்படுத்தும் முயற்சியிலும் ஜெர்மனி ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க:சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. உலக நாடுகளில் எதிரொலிக்குமா?