தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்திய நாட்டின் தேச பக்தர் பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

பிரதமர் மோடியின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அவரது தலைமையின் கீழ் இந்தியா மிகப்பெரும் பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

By

Published : Oct 28, 2022, 1:14 PM IST

மாஸ்கோ:ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த வால்டாய் கருத்தரங்கில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உரையாற்றினார். அப்போது அவர், "இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் கீழ் இந்தியா மிகப்பெரும் பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ளது. இந்திய நாட்டின் தேச பக்தர் பிரதமர் நரேந்திர மோடி.

அவரது 'மேக் இன் இந்தியா' திட்டம் பொருளாதார ரீதியாக நாட்டின் வளர்சிக்கு முக்கிய பங்காற்றிவருகிறது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதால் மேக் இன் இந்தியா திட்டத்தின் பயன்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இந்தியாவின் திட்டங்களும் 130 கோடி மக்களின் வளர்ச்சியும் அந்நாட்டின் மீதான மரியாதைக்கும் அபிமானத்திற்கும் காரணமாக இருக்கின்றன. இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நல்லுறவு சிறப்பாக உள்ளது. பல தசாப்தங்களாக நீடித்துவருகிறது.

இந்திய நாட்டின் விவசாயத்திற்கு முக்கியமான உரங்களின் ஏற்றுமதியை அதிகரிக்குமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் விவசாய ஏற்றுமதியை 7.6 மடங்கு அதிகரித்துள்ளோம். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தங்கள் சொந்த நடவடிக்கைகளின் விளைவுகளால் உலக நாடுகளை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளுகின்றன. மேற்கு நாடுகளின் அதிகாரப்போக்கு நிச்சயமாக ஆபத்தானது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவேன்: பிரதமர் ரிஷி சுனக்

ABOUT THE AUTHOR

...view details