மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், இப்போரின் தற்போதைய நிலவரம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடன் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உரையாடலின்போது, போர் நிறுத்த விதிகளை மீறி சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்டுவரும் தாக்குதல் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், வடமேற்கு சிரியாவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர துருக்கியுடனான ரஷ்யாவின் கூட்டு முயற்சி குறித்து விளாடிமிர் புடின் இருநாட்டுத் தலைவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.