வாஷிங்டன்: இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஜாஹ்னவி கந்துலா, அமெரிக்காவின் சியாட் நகரத்தில் காவல் துறை வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த பெண்ணின் மரணம் குறித்து கேலி செய்யும் விதமாக காவல் துறையினர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி, அங்கு உள்ள பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்திய தூதரகம் சார்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் அமெரிக்காவில் வாகன விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக பல அதிர்ச்சி செய்திகள் வெளிவந்தன. இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்ற வந்தன. இந்த விபத்தை ஏற்படுத்திய காவல் துறை அதிகாரி கெவின் டேவ் மணிக்கு 120 கிமீ வேகத்தில் வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டி இளம்பெண் மீது மோதியதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார் என தெரிய வந்தன.
இந்த விபத்தை ஏற்படுத்திய காவல் துறை அதிகாரி கெவின் டேவ் சியாட் காவல் துறையில் உள்ள மற்றொரு அதிகாரியான டேனியல் ஆடரர் என்பவருக்கு தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு, விபத்தில் இளம்பெண் உயிரிழந்தது பற்றி கவலை இல்லாமல் கிண்டலாக பேசியுள்ளனர்.
இது கவால் துறை அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகி உள்ளன. அந்த வீடியோவில், "பெண் இறந்துவிட்டாள். சாதாரணமான பெண்தான். ஒரு காசோலையை எழுதி உடலின் அருகே வை. 11,000 டாலர் போதும் அந்த பெண்ணுக்கு அவ்வளவுதான் மதிப்பு" என சிரித்தபடி பேசியுள்ளனர்.
இந்த வீடியோ பதிவு உயர் அதிகாரிகளுக்கு தெரிய வர, சம்பவம் குறித்து கூடுதல் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டன. மேலும், இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பகுதியிலுள்ள இந்திய துணைத் தூதரகம் அறிக்கை வெளியிட்டது. அதில், உயிரிழந்த கந்துலாவிற்கு இது மிக துயரமான நிகழ்வு எனவும், அவரின் உயிரிழப்பிற்கு பின்னால் இருக்கும் அனைவரும் தண்டிக்கப்படும் வகையில் விசாரணை தேவை எனவும் தெரிவித்து இருந்தன.