இலங்கை:இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச நேற்று (மே9) பதவி விலகினார். இருப்பினும் அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவி விலகக்கோரி கொழும்பு நகரில் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
பல இடங்களில் கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், மகிந்த ராஜபக்சவின் பாரம்பரிய வீட்டை நேற்றிரவு தீயிட்டு எரித்தனர். ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள், சொத்துகள் உள்ளிட்ட பலவற்றை தீக்கிரையாக்கினர்.
மக்கள் கொந்தளிப்பை தொடர்ந்து, இன்று (மே10) காலை மகிந்த ராஜபக்ச, கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து வெளியேறினார். மக்களிடம் சிக்காமல் இருப்பதற்காக, குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் செல்ல மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் இருந்து அவர்கள் தப்பியோட இருப்பதாக தெரியவந்ததால், நூற்றுக்கணக்கான மக்கள் கடற்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: பதவி விலகினார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச!