இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியின் மகள் லிலிபெட் டயானாவுக்கு சில நாட்களுக்கு முன்பு முதலாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரபல புகைப்பட கலைஞர் மிசான் ஹாரிமன் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த அழகிய புகைப்படத்தில், லிலிபெட் நீல நிற ஆடையில் தேவதை போல காட்சியளிக்கிறாள்.
லிலிபெட் டயானாவின் பிறந்தநாள் புகைப்படம்... நீல நிற ஆடையில் புன்னகைக்கும் தேவதை...! - ஹாரி மேகன் தம்பதியின் மகள் லிலிபெட் டயானாவின் முதல் பிறந்தநாள்
ஹாரி - மேகன் தம்பதியின் மகள் லிலிபெட் டயானாவின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Prince Harry
லிலிபெட்டின் முதலாவது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடனும், லிலிபெட்டின் குடும்பத்துடனும் சேர்ந்து கொண்டாடியது ஒரு பாக்கியம் என்று ஹாரிமன் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.