கொழும்பு: தீவு நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மக்கள் ரொட்டித் துண்டுக்கு அல்லல் படும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது. வாகனங்கள் எரிபொருள் நிரப்ப பல கிலோ மீட்டர் தூரம் நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் இலங்கையில் பேஸ்புக், ட்விட்டர், ஸ்னைப்சாட், டிக்டாக் என அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அங்கு 13 மணி நேரம் முதல் 18 மணி வரை மின்வெட்டு நிலவுகிறது. இதனால் மக்கள் செய்வதறியாது தவித்துவருகின்றனர். மறுபுறம், ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.