சிரியா: துருக்கியில், சிரிய எல்லையை ஒட்டி அமைந்துள்ள காசியான்டேப் நகரில் இன்று காலை(பிப்.6) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.8ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா இருநாடுகளிலும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு அதே பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் சிரியா, லெபனான், ஜோர்டான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் ஒரு மருத்துவமனை உள்பட 900-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில், பச்சிளம் குழந்தைகள், நோயாளிகள் என நூற்றுக்கணக்கானோர் சிக்கினர்.
அதேபோல் சிரியாவில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் துருக்கி மற்றும் சிரியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் சுமார் மூன்றாயிரம் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.