தோஹா (கத்தார்):பிபாஉலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று நள்ளிரவு தோஹாவில் உள்ள லூசைல் ஸ்டேடியத்தில் நடந்த 'ஜி' பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - உருகுவே அணிகள் மோதின. 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் முனைப்பில் போர்ச்சுக்கல் அணி களமிறங்கியது. அதேபோல் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உருகுவே அணி களம் கண்டது.
பரபரப்பாக தொடங்கிய முதல் பாதி ஆட்டம் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இரண்டாவது பாதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி வீரர் புருனோ பெர்னாண்டஸ் 54 நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன.