லிஸ்பன்:இந்தியாவை சேர்ந்த 34 வயது கர்ப்பிணி போர்ச்சுகல் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த போது, லிஸ்பனில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால், அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த பெண் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததாலேயே உயிரிழந்தார். இதற்கு போர்ச்சுகல் சுகாதாரத்துறையே காரணம் என்று பலர் குற்றம்சாட்டின் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மார்டா டெமிடோ, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறுகையில், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கின்றோம். அந்நாட்டு சுகாதார அமைச்சர் ராஜினாமா செய்ததாக சில ஊடக அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம். முழு விவரம் எனக்குத் தெரியாது” என்றார்.
இதனிடையே போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா தனது ட்விட்டரில் பக்கத்தில், “மார்டா டெமிடோ செய்த அனைத்து பணிகளுக்கும் நன்றி, சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்” என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி, தொழிலதிபர் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு