வாடிகன் :இயேசு கிறிஸ்து பாடுகளுக்கு உட்பவிக்கப்படுகின்ற நாட்களான தவக்காலத்தின் இறுதி வாரத்தை கணத்த நாட்கள் எனக் அழைக்கப்படுகிறது. புனித வியாழனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தேவாலாயங்களில் திருப்பலி, சிறப்பு ஆராதனை, பாதம் கழுவும் நிகழ்வு நடைபெற்றது.
பணிவை பிரதிபலிக்கும் நாளாக புனித வியழான் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. மனிதன் மண்ணில் இருந்து உருவாக்கப்பட்டான், மண்ணுக்கே மீண்டும் திரும்புவான் என்பதை உணர்த்தியே ஆண்டுதோறும் தவக்காலம் அனுசரிக்கப்படுகிறது. வாழ்வை பணிவுடன் கொண்டு செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் புனித வியாழன் தினத்தன்று தனது சீடர்களின் பாதங்களை இயேசு கிறிஸ்து கழுவினார்.
அதையே தன் சீடர்களையும் செய்யச் சொல்லி இயேசு கிறிஸ்து பணித்தார். தவக்காலத்தில் அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் புனித வியாழன் அன்று பொது மக்கள், முதியவர்களின் கால்களை இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக கருதப்படும் பாதிரியர்கள் கழுவுகின்றனர். புனித வியாழனை முன்னிடு கத்தோலிக்க தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு நடைபெற்றது.