பாலி: இந்தோனிசியாவின் பாலியில் ஜி20 உச்சிமாநாடு நவம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் ஆகிய நாடுகளில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி ஜி20 நாடுகளின் தலைவர்களுடன் 'டமான் ஹுட்டான் ராய என்குரா ராய்' என்னுமிடத்தில் உள்ள மாங்குரோவ் காடுகளுக்கு இன்று (நவம்பர் 16) பயணம் செய்தார். அப்போது அங்கு மரங்களை நடவு செய்தார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மாங்குரோவ் காடுகள் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜி20 தலைமைப் பொறுப்பில் இந்தோனேசியா இருந்தபோது, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டு முன்முயற்சியான பருவநிலைக்கான மாங்குரோவ் கூட்டணியில் இந்தியா சேர்ந்தது.