அபுதாபி: ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபுதாபி விமான நிலையம் சென்றடைந்த அவரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுடன் சென்று வரவேற்றார். பின்னர், இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு! - ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யான்
ஜி7 மாநாட்டிற்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி, அங்கு அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.
அப்போது, அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். ஷேக் கலீஃபா ஒரு சிறந்த அரசியல் தலைவர் மற்றும் தொலைநோக்கு சிந்தனையாளர் என்றும், அவரது ஆட்சியில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரம் இடையிலான உறவுகள் வலுவாக இருந்து வந்ததாகவும் மோடி தெரிவித்தார். ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யான் அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அவரை சந்தித்துள்ளார்.
இதையும் படிங்க:நாட்டிற்காக மக்கள் தேநீர் அருந்துவதைக் குறைக்க வேண்டும் - பாகிஸ்தான் அமைச்சர்