தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜப்பானில் ஓடுபாதையில் சென்ற விமானத்தில் தீ விபத்து - உயிர் தப்பிய பயணிகள்! - நிலநடுக்கம் பலி எண்ணிக்கை

Japan Airlines Flight fire accident: ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 2) தீப்பிடித்தது. இந்த விமானத்தில் இருந்த 400 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

plane-catches-fire-at-tokyos-haneda-airport
விமான ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து - 400 பேர் உயிர் தப்பினர்..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 4:38 PM IST

டோக்கியோ (ஜப்பான்): ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோ ஹனேடா விமான நிலையம் உலகளவில் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். இந்த விமான நிலையத்திற்கு ஷின் சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது விமான ஓடுபாதையில் விமானம் வரும்போது, அதில் தீ பிடித்து இருந்ததாகவும் உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அதில் பயணம் செய்த 400க்கு மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் ஏற்பட்ட தீயினை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தாக்கப்பட்டதா அல்லது ஜப்பான் கடலோர காவல்படை விமானம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து முழுமையான தகவல் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:இந்தியா-ரஷ்யா இடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரிவாக்கம் செய்ய ஒப்பந்தம்

ஜப்பானில் மேற்கு பகுதியில் நேற்று (ஜனவரி 1) அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 வரை பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கோயாமா, இஷிகாவா, நிகாடா, ஹயோகோ பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

மேலும் நேற்று கடலில் ஏற்பட்ட ஆக்ரோஷமான அலைகளால் மக்களும் அச்சமடைந்து இருந்தனர். இந்த நிலையில், இன்று (ஜனவரி 2) ஜப்பான் அரசு தரப்பில் விடுக்கப்பட்டு இருந்த அனைத்து வகையான சுனாமி எச்சரிக்கையும் அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:2024-ம் ஆண்டில் சென்னை ஐஐடி; 100 புத்தாக்க நிறுவனங்களின் தொழில் ஊக்குவிப்பில் ஈடுபடுத்த இலக்கு!

ABOUT THE AUTHOR

...view details