கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று, அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரி, கொழும்பில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று(ஜூலை 9) ஆயிரக்கணக்கானோர் அதிபர் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு படையினர் திணறினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. போராட்டத்தின் தீவிரப் போக்கை அறிந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர். போராட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லம் தீவைக்கப்பட்டது.