மணிலா (பிலிப்பைன்ஸ்):பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு அருகில் உள்ள ஒரு ஏரியில் இன்று (ஜூலை 28) அதிகாலை 1 மணியளவில் பயணிகள் உடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்த பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் ஊடகங்கள் அளித்த தகவலின்படி, இந்த விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 40 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
மேலும், 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த விபத்து நடைபெற்ற இடம், பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் உள்ளது. அதேநேரம், நகரில் உள்ள பினான் கோனானின் பரங்காய் கலினவான் என்ற இடத்தில் இருந்து 50 யார்டு தொலைவில் உள்ள எம்பிசிஏ பிரின்சஸ் அயா கேப்சைசுடு என்ற இடத்தில் உள்ளது.
முன்னதாக, விபத்துக்கு உள்ளான படகில் எத்தனை பயணிகள் பயணித்தனர் என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அது மட்டுமல்லாமல், திடீரென காற்று ஒரு பக்கமாக பலமாக வீசத் தொடங்கி உள்ளது. அந்த நேரத்தில் படகில் பயணித்த பயணிகள் அனைவரும் பீதி அடைந்து அலறிக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடத் தொடங்கி உள்ளனர்.