இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கோம்சாட்ஸ் என்னும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைகழகத்தில் கீழ் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைகழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறைக்கான செமஸ்டர் தேர்வு அண்மையில் நடந்துள்ளது.
இந்த தேர்வில் அண்ணன்-தங்கை உறவு குறித்து கேட்கப்பட்ட ஆபாசமான கேள்வி ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த கேள்வியில், மார்க் தனது தங்கை ஜூலி உடன் கல்லூரி கோடை விடுமுறைக்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் ஒரு கடற்கரை அருகே உள்ள ஹோட்டல் அறையில் இரவு நேரத்தில் தங்க வேண்டியிருக்கிறது.
அப்போது இருவரும் எதிர்பாராத விதமாக உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். இதற்காக ஆணுறையையும், கருத்தடை மாத்திரைகளையும் பயன்படுத்துகின்றனர். இந்த உறவு இருவரிடையே மேலும் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இதேபோல மீண்டும் செய்யக்கூடாது என்று முடிவு செய்கின்றனர்.
இருவரும் உடலுறவு வைத்துக்கொள்வது சரி என்று எதை வைத்து முடிவு செய்தார்கள் என்பது குறித்து 300 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதவும் என்று கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வியால் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியும், அருவருப்பும் கிளம்பியது. பல மாணவர்கள் தேர்வுகளை புறக்கணித்தனர். அதோடு பல்கலைகழக நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் கேள்வியை தயாரித்த பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் அந்த கேள்வி தவிர்க்கப்பட்டு தேர்வு நடந்து முடிந்தது. இருப்பினும் சில மாணவர்கள் இந்த கேள்வித் தாளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த பதிவுகள் வைரலாகி பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. இந்த கோம்சாட்ஸ் பல்கலைக்கழகத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க:திருமண வரவேற்பின்போது கொடூரம்.. ஒரே அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுமணத் தம்பதி.. குடும்பத்தார் அதிர்ச்சி..