இஸ்லாமாபாத் :கண்டம் தாண்டி தாக்கும் கவுரி பாலிஸ்டிக் வகை ஏவுகணை பயிற்சி சோதனையில் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை சோதனை முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கவுரி பாலிஸ்டிக் ஏவுகணை பயிற்சி சோதனையை வெற்றிகரமாக செலுத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தொழில்நுட்பம் மற்றும் செயலாக்கத்தின் தயார் நிலை குறித்து ஆராய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அண்மையில் அபபீல் ஆயுத அமைப்பின் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக பாகிஸ்தன் ராணுவம் மேற்கொண்டு இருந்தது. சரியாக ஒரு வார இடைவெளியில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கவுரி ஆயுத அமைப்புக்கு தேவையான உபகரணங்களை வழங்கி வந்த சீனாவின் மூன்று நிறுவனங்களுக்கு அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்தது.