தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியா உடன் அமைதியைத்தான் விரும்புகிறோம் - பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீஃப் - பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு காண உதவும்

இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியைத்தான் தாங்கள் விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீஃப் தெரிவித்தார்.

Pakistan
Pakistan

By

Published : Sep 24, 2022, 3:58 PM IST

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐநாவின் 77ஆவது பொதுச்சபை கூட்டம் நேற்று(செப்.23) நடைபெற்றது. அதில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீஃப் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியையே நாங்கள் விரும்புகிறோம். தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் என்றால், ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. போர் அல்ல, அமைதியான பேச்சுவார்த்தைகள் மட்டுமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. உலகிலேயே மிகவும் ராணுவமயமாக்கப்பட்ட மண்டலமாக காஷ்மீர் மாற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மக்கள் எப்போதும் காஷ்மீரிகளுக்கு துணை நிற்பார்கள். 1947ஆம் ஆண்டு முதல் இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று போர்களை சந்தித்துள்ளன. இதன் விளைவாக, இருநாட்டிலும் வறுமை உள்ளிட்ட பிரச்சினைகள்தான் அதிகரித்துள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஆயுதங்களை வாங்குவதிலும், போர் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதிலும் தங்கள் வளங்களை வீணாக்கக் கூடாது. அமைதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்கள் மூலம் கருத்து வேறுபாடுகள், பிரச்சனைகளை தீர்க்கலாம்.

பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்தால், பெண்கள், குழந்தைகள் உட்பட 3.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்" என்று கூறினார்.

இதையும் படிங்க: நைஜீரியா துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்

ABOUT THE AUTHOR

...view details