இஸ்லாமாபாத் :இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளடக்கங்களை பாகிஸ்தானின் ஒளிபரப்ப கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு தடை விதித்து பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுற ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. பெர்மா என அழைக்கப்படும் பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம், இந்திய உள்ளடக்கங்களை ஒளிபரப்பும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தால் சட்ட விரோதமானது அல்லது அரசால் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இந்திய உள்ளடக்கங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பெர்மாவிடம் உரிய அனுமதி பெறாத நிறுவனங்கள் கேபிள் டிவி நெட்வொர்க் விநியோகம் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டவிரோதமாக இந்திய சேனல்களை பாகிஸ்தானில் ஒளிபரப்புச் செய்ததாக கிடைத்த புகாரில் பாகிஸ்தான் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அலுவலகங்களில் பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் மற்றும் பெர்மாவின் உத்தரவுகளை மீறி இந்திய சேனல்களை ஒளிபரப்பும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.