இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வரலாறு காணாத பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு, எரிவாயு பற்றாக்குறை, விலை வாசி உயர்வு, எரிசக்தி துறை முடக்கம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்தித்துவருகிறது. பாகிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சியை பொறுத்துவரையில் அண்டை நாடான இந்தியாவுடன் கலந்து பேசி சுமூக தீர்வு காண விரும்புவதாக அந்த நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரிப் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே பாகிஸ்தான் அரசுக்கு கூடுதல் தலைவலியாக மின் தடை வந்துள்ளது. கடந்த ஆண்டு எரிபொருள் மற்றும் நிலக்கரி உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி தடைபட்டு பாகிஸ்தான் வரலாறு காணாத மின் தடையை சந்தித்தது. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை மின் தடை ஏற்பட்டது.