லாகூர்:பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் முல்தான் நகரில் உள்ள அரசு மருத்துவமனையின் பிணவறை மேற்கூரையில் அழுகிய நிலையில் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இவை மாயமானவர்களின் சடலங்கள் என்றும், இதில் மர்மம் இருக்கிறது என்றும் வதந்திகளை தீயாய் பரவின. இதுதொடர்பான வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகின.
இதன் எதிரொலியாக அந்த சடலங்களை மீட்டு தகனம் செய்யவும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய சுகாதார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த மாநில முதலமைச்சர் பர்வேஸ் எலாஹி உத்தரவிட்டார். இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு சுகாதார செயலாளர் முஸாமில் பஷீர் தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் விசாரணையை முடித்து அறிக்கை அளிக்கவும் இந்த குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.