இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் மேற்கொண்டிருந்த பல்வேறு வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கான நிதி பங்களிப்பை வழங்காமல் சீனா காலம் தாழ்த்தி வருவதால் அரசின் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் ஷாசாத் குழுமத்தின் துணை நிறுவனமாக பெட்ரோலியம் எக்ஸ்புளோரேசன் பிரைவேட் லிமிடட் நிறுவனத்துடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக சீன தேசிய பெட்ரோலிய கழகத்திற்கு 20 லட்சத்து 48 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்து பாகிஸ்தான் சிவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதன் விளைவாக பாகிஸ்தான் - சீனா இடையிலான பொருளாதார உறவு ஸ்தம்பித்து காணப்படுவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் மேற்கொண்டு இருந்த பல்வேறு வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கான நிதி பங்களிப்பை சீனா நிறுத்து வைத்து உள்ளது.
சீனா - பாகிஸ்தானின் பொருளாதார வழித் தடத்தில் மெயின் லைன் 1 மற்றும் கராச்சி - பெஷவார் இடையிலான ரயில்வே பணி, கராச்சி வட்ட ரயில்வே பணிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது பாகிஸ்தானுக்கான நிதி பங்களிப்பை சீனா நிறுத்தி உள்ளதால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க :சூடான் ராணுவ மோதல் - பலி எண்ணிக்கை அதிகரிப்பு! இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்!