வாஷிங்டன்: அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (டிச.25) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அமெரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில் நேற்று (டிச.22) மாலை 6 மணி நிலவரப்படி 2,270 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான கண்காணிப்பு தளமான FlightAware தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து இன்று (டிசம்பர் 23) 1,000 விமான சேவைகளும், நாளை (டிச.24) 85 விமானங்களும் முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டுவிட்டன.