சான் ஃபிரான்சிஸ்கோ: முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ், கடந்த ஆண்டு முதல் தனது வாடிக்கையாளர்களுக்காக இலவச வீடியோ கேம்களை வழங்கியது. ஆனால், இந்த வீடியோ கேம்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நெட்ஃபிளிக்சின் வாடிக்கையாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே அதன் இலவச வீடியோ கேம்களை விளையாடுவதாக ஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது. ஆப்டோப்பியா (Apptopia)என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், நெட்ஃபிளிக்சின் வாடிக்கையாளர்களில் 17 லட்சம் பேர் மட்டுமே அதன் வீடியோ கேம்களை விளையாடுகிறார்கள் என்றும், இந்த எண்ணிக்கை நெட்ஃபிளிக்சின் 221 மில்லியன் சப்ஸ்கிரைபர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.